தெய்வத்தை கண்டேன்

நெடுந்தூர பயணம் ,,
மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;;
தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள்
புதுப்பிக்க பட்டுக் கொண்டிருந்த
கோவிலைக் கண்டும்... மனம் கேட்கவில்லை யாருமே இல்லாத
இடத்தில் இப்படி ஒரு கோவிலா???அதுவும் எனக்கு பிடித்த அம்மன் வேற,,
தேவதை போல வந்தான்;;;கோயில் வரை வந்துட்டீங்க;வாங்க உள்ள போகலாம் என்ற படி...
 இனம் புரியாத நம்பிக்கை அவன்(ர்) தான் இருக்கிறானே,,தைரியமாய் இனி போகலாம் என்று உள்ளே சென்றேன்,,ஒருவரும் இல்லை ;பூசாரியைத் தவிர...
 நான்கு ,ஐந்து மின் விளக்குகள் ,,,பாதி முடிந்தும்,,,மீதம் முடியாமலும் நிலையில் சிற்பங்கள்,,,என் அம்மாவை சந்தித்தேன் ..நினைக்கவே இல்லை
இப்படி ஒரு தருணம் கிடைக்கும் என்று ,,,அவள் என்னை தனியே சந்திக்க் விரும்பினாள் போல,,,
அமைதியாய் நெடு நேரம் எங்கள் மௌனமே பேசியது போல்;;ஒன்றும் விளங்கவில்லை எல்லாம் எனக்கு சாதகமாய் நடந்தது;;;நான் மனதில் வேண்டியதற்கு எல்லாம்  சத்தமாய் பதில் சொன்னது போல கோவில் மணி ஒலித்தது... அழகாய் அவளே சிரித்தாள் ,,,இனி எதற்கும் கலங்காதே
இனி வரும் நாளெல்லாம் உன்னுடனே நான் இருப்பேன் என்ற படியே இருந்தது அவள் பார்வை...
அந்த அழகான தென்றலுக்கு இடையில் அமிர்தம் தின்றது போல இருந்தது
அந்த நிகழ்வு...
கொஞ்சம் பூவும் ,,,குங்குமமும் பூசாரியிடம் கொடுத்து என் மகளுக்கு கொடு என்று வாழ்த்தினாள் அவள்...
உன்னையே கண்டு விட்டேன் ;வேறென்ன வேண்டும் எனக்கு ,,,என்றும் என்னுடன் நீ இருக்கிறாய் என்ற தைரியத்தோடு புறப்பட தயாரானேன்...
அம்மாவைப் பார்க்க அழைத்துச் சென்ற என் தெய்வத்தோடு...


## யாமி ###
9 comments:

 1. Replies
  1. வார்த்தைகள் வந்து வரிசைக்கட்டி உங்கள் கவிதைக்காக காத்திருக்கிறது போலும்... அருமையான உவமானங்கள்! காதலிக்கும், உங்கள் காதலுக்கும் எனது வாழ்த்துகள்....

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. உணர்வு , உணர்ச்சி, பாசம், நேசம்
  அனைத்தையும் விலை பேசும் இந்த கணணி
  உலகத்தில் .....

  உங்களது கவிதைகள்

  மேல் குறித்த பரிணாமங்களை
  மனிதர்களுக்கு நினைவு படுத்துகின்றன

  இது உங்களின் கற்பனை வளமோ

  அல்லது

  நிஜ வாழ்கையின் உண்மை சுவடுகளோ

  இறைவனுக்கும் உங்களுக்கும் வெளிச்சம்

  எதுவாக இருந்தாலும்

  நான் உங்களது வரிகளை ரசிக்கின்றேன்

  அதன் வேதனைகளை உணர்கின்றேன்

  உங்களது இந்த திறமைக்கு எனது இதயத்தின் உல் உணர்வுகளால் வாழ்த்துகிறேன்

  வேதனைகளை வெளியிட்டு சாதனைகள் படிக்கவும்

  உங்களது இந்த திறமையினை என்றேண்டும்

  வியாபாரம் ஆக்கி விடாதீர்கள்

  உங்களது இந்த ஈர வரிகள் விலை மதிப்பற்ற பொக்கிஷம்

  என்றும் அன்புடன்

  ஈர இதயம்

  ReplyDelete
 4. உங்களைப் போல் ஓர் பெண்ணுமில்லை இத்தனை காதலில்
  உங்களவர் போல் ஓர் ஆணுமில்லை அத்தனையும் கிடைப்பதற்கு.

  வாழ்க வளமுடன்!

  எழுத்தோலை!

  ReplyDelete
 5. nala tamil, nalla neerutru, vatramal pani thodarattum, vallthukaal

  ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...