உயிரே...

என் குருதி கலந்து
நரம்பில் நுழைந்து
நான்காய் பிரிந்து
உடலில் நிறைந்து
உயிரில் உறைந்து போனாய்
என்னவென்று சொல்ல
என்னுள் நுழைந்த
உன் நினைவுகளை...

கொஞ்சம் எட்டிதான் பாரேன்..

நீ மறந்து போனதால் 
இடிந்து போனது
பள்ளிக் கூடம்... ஆண் நிலா...

நிலவை காட்டி 
ஊட்டினாங்களா?
இல்ல நிலவையே 
உணவாக ஊட்டினாங்களா?
இப்படி வசீகரிக்கிறான்,
என்னை...