முகவரி...


என்னை 
நீ வெட்டிப்
போட்டிருந்தால் கூட
கூடித் தின்ன
ஒரு நாயும் 
வந்திருக்காது...

என்னை நீ 
கொன்றிந்தால் கூட
கூட்டம் என்னவோ
குறைவாய் தான் 
இருந்திருக்கும்...

என்னை நீ 
அதிகப்படியான
வார்த்தைகளால் 
அசிங்கப்படுத்தி இருந்தால் கூட
மறுபடியும் வந்து
"உன்னை நேசிக்கிறேன்"
என்று தான் கூறி இருப்பேன்...

வெற்றுக்காகிதம் என்னை 
வேரோடு மாற்றி 
வேகக் கவிதாயினி ஆக்கினாய்...

ஒன்றை மட்டும் 
புரிந்து கொள்
என்னவனே!
நீ பிரிந்து 
போனதால் மட்டும்
என் காதல்
அழிந்து விடும் என்ற
எண்ணத்தை மறந்து விடு...

மரணப்படுக்கையிலும் 
என் இதயத்தின்
கடைசி துடிப்பு நின்றாலும்,
உன் நினைவுகளை சுமந்து
உனக்காய் கண்ணீர் வடித்த
என் காதலின் நினைவுகள்
உன்னைச் சுற்றியே இருக்கும்;
உன்னை இன்னும் அதிகமாய்
காதலித்த படி...


யாமிதாஷா... 

7 comments:

 1. மரணம் என்னை துரத்தும் வலி
  புரியுதடி கண்மனி
  உன்னை மறக்காமல்
  நான் உறங்கும் இரவுகளில்


  அன்புடன்
  வளவன்

  ReplyDelete
 2. //நீ பிரிந்து
  போனதால் மட்டும்
  என் காதல்
  அழிந்து விடும் என்ற
  எண்ணத்தை மறந்து விடு...//

  சிறப்பான வரிகள்..

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. Udal Mattum Thaan
  Pirinthu Sendru Irukkum,
  Unn Anbu Nenaivugaludan
  Thaan Iruppan Avanum
  Kanneer Vadikaathe ...

  ReplyDelete
 5. உன்னைப் போலவே கவிதை எழுதும் என் உயிர் இப்பொழுது எங்கேயே துடித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் காண்பேன் அவளை... (லது (எ) லதா)//////////
  உனது கவிதைகளைப் படிக்கும்பொழுது அவள் எனக்கு எழுதியதுபோலவே உள்ளது. அருமை. தொடர்ந்து விடாமல் எழுதுங்கள்.. என்னவளுடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.

  ReplyDelete
 6. அழகிய வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. மரணப்படுக்கையிலும்
  என் இதயத்தின்
  கடைசி துடிப்பு நின்றாலும்,
  உன் நினைவுகளை சுமந்து
  உனக்காய் கண்ணீர் வடித்த
  என் காதலின் நினைவுகள்
  உன்னைச் சுற்றியே இருக்கும்;
  உன்னை இன்னும் அதிகமாய்
  காதலித்த படி... அழகான அருமையான பதிவுகள்

  ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...