பெண்ணாய் பிறந்தாலே இப்படி ஒரு நிலை வருமோ??





நான் கொஞ்சம் அழகிய பெண் தான்,,,
ஆடை அலங்காரத்துடன் வீதியில்
நடந்து சென்று கொண்டிருந்தேன்.
32 வயது மதிக்கத்தக்க
ஒரு நபர் என் அருகில் வந்து ,,,
அவர் எஜமானரின் அந்தப்புரத்தை
அலங்கரிக்க அழைத்தார்...

நான் சிறிது பதட்டத்துடன்,,,
"அண்ணா" நீங்க நினைக்குற மாதிரி பொண்ணு
நான் இல்லை என்றேன்...
அண்ணா என்று
அழைத்ததைக் கூட பொருட்படுத்தாமல்
அவர் கூறினார்,,,
என் எஜமானர் உங்களுக்கு நெறைய
பொன்னும் பொருளும் அள்ளித் தருவார்;
வசதியாக வாழலாம் என்று...

நான் ஓடிவிட எண்ணி வழி தேடினேன்,,,
அதற்குள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து
என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து
அவர்கள் எஜமானரின் முன் நிறுத்திவிட்டு
சென்று விட்டனர்...

அழகுக்கு குறை இல்லை எனினும்,,,
அவன் கோபமும் கொடூர எண்ணமும்
சேர்ந்து படு பயங்கரமாக
அவனை எனக்கு காட்டியது...

தப்பிக்க வழிதெரியாமல்
விழித்துக் கொண்டிருந்தேன்...
அவன் என் அருகில் வந்தான்,,,
அவன் காமப் பார்வையை
எனக்கு பிடிக்கவே இல்லை...
இதை விட கொடிது "அழகிய பெண்களை
அனுபவித்துக் கொல்வதே இவன் வேலை"யென்று
அவன் வார்த்தைகளில் தெரிந்து கொண்டேன்...

உயிர்போவதில் பயமில்லை,,,
இவன் என் உணர்வுகளை அல்லவா
சூறையாட நினைக்கிறான்...

அவன் என்னை நெருங்கி வர முற்பட்டான் ,,,
நான் என் பாதங்களை பின்னோக்கி நடந்தேன்...
கண்ணீர் வடித்தேன்,,, கடவுளை வேண்டினேன்...
அந்த கொடூரனின் கண்களில் கோபமும்,,,
காமமும் கொப்பளிக்கக் கண்டேன்...

இனி தப்பிக்க வழிஇல்லை என்ற நிலை வந்தது ,,,
உறைந்து போய் சுவரோடு ஒட்டியபடி
பயத்தில் கண்களை இருக்க மூடிக் கொண்டேன்...

திடீரென என் தோள்களை தட்டிய படி
ஒரு கை "இன்னும் எழும்பலையா நேரமாகிடுச்சு "என்று...

அடப்பாவமே,,,,

" நினைவுகள்  தான் நம்மள நிம்மதியா வாழ விடுறதில்லை" ணா;
இந்த "கனவுகள் கூட நம்மள நிம்மதியா தூங்க விடுறதில்லை"பா...

இப்படியெல்லாம் கனவு வந்தா எப்படி தான்
தூங்குறது...


(அடுத்த கனவில் சந்திக்கிறேன் :) )





1 comment:

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...