காதலிக்கிறேனடா உன்னை...

உன் கழுத்தில் - கத்தி
வைத்தா?கேட்டேன்;
என் கழுத்தில்
மாலையிடவா என்று 
இல்லையே!!!

உன்னுடன் சேர்ந்து 
ஊர் சுற்றவா 
விரும்பினேன்;
இல்லையே!!

நீ பார்த்திருக்க
வேண்டாம்;
உன் பரிசுப் பொருட்கள்
வேண்டாம்;

பகல் இரவாய் 
கொஞ்சல்களும்;
பக்கம் பக்கமாய்
கடிதங்களும் வேண்டாம்,,,























நீ என்னை நேசிக்க கூட
வேண்டாம்...

நான் உன்னை
காதலிப்பதையும் -உனக்காய்
காத்திருப்பதையும்
தடுக்காமல் இருந்தாலே
போதுமடா...



அதுவே என் காதலுக்கு 
வெற்றி தான்...

3 comments:

  1. oru kai thattinal oosari varaathu.... avaraiyum kaathalikka vaikkanum.....appo thaan vettri ennai poruthavarai.....

    ReplyDelete
  2. அருமை. பதிவர் தினத்தன்று தங்களின் புத்தக வெளியீட்டுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. wowwwwwww chance illainga avlo ththroobama irukku unga varigal..!

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...