நிலமகள் நோதல் இன்றி

நீந்துகின்ற நீலநிற கூந்தல் – அவள்
பாகமெல்லாம் பச்சை நிறமாய்
கண்ணில் சிக்காத காற்றோடு கலந்தவள்,
நெருப்பாய் வாழ்ந்த கண்ணகியாய் – அவள்
அன்பை மட்டும் ஆகாயமாய் கொடுப்பவள் .
பசுமை வளம் கொடுக்கும் அவள்மடியில் – தினம்
பட்டினியில் மடியும் அவலம் ;
புத்தனும் காந்தியும் வாழ்ந்த புவியில் ,
புன்னகையை கொல்லும் மதக்கல்லறைகள்
எட்டிப்பார் ! என்  நிலதேவதையை ,
மரங்கள் மடிந்து மாளிகை ஆனது – இங்கு
மாசுற்ற சாக்கடை மனிதர் இதயமானது .
பந்த பாசங்களால் படர்ந்த நிலம் ,
பாகப்பிரிவினையால் சருகாகி போனது. . .
போதுமடா  மானிடா ! புறப்படு !
குண்டுகள் துழைக்காத
புதிய உலகம் படைக்க ,
நிலமகள் நோதல்இன்றி
பூக்களை விதைக்க - புறப்படு
மனிதநேயம் காக்க மண்ணில் 

நல்விதைகளாய் விழுவோம்...


யாமிதாஷா...

2 comments:

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...