எப்போது அனுமதிப்பாயடா?

உன் ஆடைக்குள் தென்றலாய்
நான் மாற மாட்டேனா? 
உன்னை உரசிக்கொண்டே இருக்க... 

உன் ஆனந்தப்புன்னகை

நானாக மாட்டேனா? 
உன் உதடருகே நான் சிரிக்க... 

உன் விரலாக மாறி 

தலை கோத மாட்டேனா??? 
காதலா! 
என்று தருவாய் , 
இதற்கெல்லாம் அனுமதி!!!

யாமிதாஷா

தெரிகிறதா உனக்கு...

காதலே! போதும்- 
இனி தென்றலாய் மாறி 
என் தேகம் தழுவாதே!!! 
உன்னில் அடிபடும் , 
சருகாய் 
பட்ட காயம் ; 
இன்னும் வலிக்கிறது
எனக்கு... 

பூவாய் உன்னை நினைத்தேன் - 

நீ புயலாய் மாறியது ஏனடா??? 
எனக்கே தெரியாமல் - நீ 
என்னுள், எப்படி நுழைந்தாய்??? 
நான் உன்னுள் புதைந்து , 
சிக்கி தவித்து , 
சின்னாபின்னம் ஆகிறேன். 
தெரிகிறதா அது உனக்கு???

யாமிதாஷா

வருவாயா???

அன்று உன்னை கண்ட பின்;
காதல் என்றால்
என்னவென்று நான் உணர்ந்தேன்...
அதிலுள்ள வலியையும்;
ஆசை தாகமும் நான்அறிந்தேன்...

நின் நியாபகங்களில் தேனொழுக; 

நான் மிதந்தேன்!!!
ஒவ்வொரு நொடியும் சாகிறேன்;உன்
தீராத ஞாபகத்தில் வேகிறேன் ...

என் கண்ணீரின் பெரு மழையால்;
நான் கண்ட கனவுகள் அழிகின்றன...
பிரிந்த பாரம் சுமந்து; இன்னும்
நீ வருவாயென காத்திருக்கிறேன்... 
   


யாமிதாஷா...    
    

நிலமகள் நோதல் இன்றி

நீந்துகின்ற நீலநிற கூந்தல் – அவள்
பாகமெல்லாம் பச்சை நிறமாய்
கண்ணில் சிக்காத காற்றோடு கலந்தவள்,
நெருப்பாய் வாழ்ந்த கண்ணகியாய் – அவள்
அன்பை மட்டும் ஆகாயமாய் கொடுப்பவள் .
பசுமை வளம் கொடுக்கும் அவள்மடியில் – தினம்
பட்டினியில் மடியும் அவலம் ;
புத்தனும் காந்தியும் வாழ்ந்த புவியில் ,
புன்னகையை கொல்லும் மதக்கல்லறைகள்
எட்டிப்பார் ! என்  நிலதேவதையை ,
மரங்கள் மடிந்து மாளிகை ஆனது – இங்கு
மாசுற்ற சாக்கடை மனிதர் இதயமானது .
பந்த பாசங்களால் படர்ந்த நிலம் ,
பாகப்பிரிவினையால் சருகாகி போனது. . .
போதுமடா  மானிடா ! புறப்படு !
குண்டுகள் துழைக்காத
புதிய உலகம் படைக்க ,
நிலமகள் நோதல்இன்றி
பூக்களை விதைக்க - புறப்படு
மனிதநேயம் காக்க மண்ணில் 

நல்விதைகளாய் விழுவோம்...


யாமிதாஷா...