கோயம்புத்தூரில் இருந்து,,,
தற்போது பெங்களூருக்கு வீடு மாற்றம்
செய்த எனக்கு,மனதில் ஒரு ஆசை
என் சொந்த ஊருக்கு போக வேண்டுமென்று
திடீரென்று புறப்பட்டு எங்கள் ஊரில் இருக்கும்
என் அம்மாவின் பழைய வீட்டிற்கு போனேன்,,,
அந்த வீட்டில் யாரும் இல்லாததால்
பூட்டி இருந்தது வெகு நாளாய்;;;
நான் வீட்டை சுத்தம் செய்து முடிப்பதற்குள் ,,,
மாலை நேரம் ஆனது,,,
மணி 6 ஆகிற்றே விளக்கு ஏற்றலாம் என்று
வத்திப்பெட்டியை தேடிக் கொண்டே இருந்தேன்...
திடீரென ஒரு வெளிச்சம் கையில் மெழுகுவர்த்தியுடன்
ஒரு ஆண் என் முன்னாள் வந்து நின்றார்,,,
அவரை பார்த்து 5 வருடம் ஆனது ,,காரணம்
அவர் 5 வருடத்திற்கு முன்பு தான் இறந்து போனார்,,,
எனக்கு பயம் ஒரு புறம் ,,பதில் பேச வராத ஊமையாய்
நான் சட்டென்று இங்கு எதற்கு வந்தாய்? எனக் கேட்டேன்...
அதற்க்கு அந்த நபர் இது நான் வாழ்ந்த வீடு ,,,
இங்கு நீ எதற்கு வந்தாய் என்று கேட்டார்???
நானும் உடனே என் அம்மாவிற்கு
அலைபேசியில் தொடர்பு கொண்டு
இப்படியாக ஐந்து வருடத்திற்கு முன்பு இறந்து போன
அந்த நபர் இங்கு வந்திருப்பதாகக் கூறினேன்,,,
அம்மாவும் "இவரு எதுக்கு அங்க வந்தாரு???"
அப்படிங்குற மாதிரி கேக்கவும்...
எங்க அம்மா கிட்டே சொல்லிட்டேன் என்ற கோபத்தில்,,
அந்த நபர் என்னோட துணிப்பை மற்றும் என்
கைப்பையை தூக்கி வெளியே வீசினார்...
நீங்க என்ன சொல்லுறது நானே போறேன் என்ற படி
அங்கிருந்து கிளம்ப தயாரானேன்...
பேசாமா மறுபடியும் பெங்களூருக்கே போய்டலாம்னு
நினச்சுகிட்டே நடந்தேன் ,,,
இன்னமும் சந்தேகம் "அவரு எப்படி அங்க வந்தாரு???"
அவரு வேற யாரும் இல்லீங்க என் அம்மாவின் கணவர்...
அவர் இறந்து 5 வருஷம் ஆச்சு...
அவர் இறந்து 5 வருஷம் ஆச்சு...
மறுபடியும் என்ன சுத்தி கன்னடத்துல பேசுற சத்தம் கேட்டுச்சு ,,
இவ்வளவு சீக்கிரம் பெங்களுர் வந்துட்டோமா???
என்னடா இது??? அப்படின்னு எழுந்து பாத்தா மணி 5.30 ,,,
ஆகா நம்ம கண்டது கனவா???
இவ்வளவு சீக்கிரம் பெங்களுர் வந்துட்டோமா???
என்னடா இது??? அப்படின்னு எழுந்து பாத்தா மணி 5.30 ,,,
ஆகா நம்ம கண்டது கனவா???
அதானே பாத்தேன் "அவரு எப்படி மறுபடியும் வந்தாருனு???" :)
ரொம்பவே பயமுறுத்துறீங்க....!
ReplyDelete