காதலனே!!!



நான் அனுமனின் 
இதயம் அல்ல 
என் 
அன்பைக் காட்ட,,,
அழிந்து போகும் 
உடலையும் 
என்றுமே 
அழிந்து போகா 
உன் நினைவுகளையும் 
சுமந்து நடப்பவள்... 


                                   

                                         

வேதனை...

பூக்கள் கிள்ளியதால் 
அழுகிறேன் 
பூமி நனைய
ஏங்குகிறேன்,
கொலுசு ஓசையை கூட 
வெறுக்கிறேன்
கொடுமை இதுவென
உணர்கிறேன்,
என் உயிரை உருக்கும்
உன் வார்த்தைகளை
இன்னமும்
ஒத்திகை பார்க்கிறது
என் இதயம்...



துணை நீயே...


என் 
பயணங்களில் எல்லாம் 
உன் துணை 
தேடுகிறேன் 
நானும் 
பயந்தவள் தானோ?



கொஞ்சம் தரிசனம் கொடேன்...



தெய்வத்தின் 
தரிசனம் வேண்டி 
தர தரவென
தரையினில் உருளும்
பக்தையைப் போல,,,
உன்னை காண வேண்டி
கட கடவென உருளுகிறது;

என் கரு விழிகள்...




நேசிக்கிறேன்...

உலகையே 
வெறுத்தேனடா,
அதற்கும் சேர்த்து 
உன்னை மட்டும் 
நேசிக்கிறேன்...